பழுதடைந்தஅங்கன்வாடி கட்டிடத்தை சொந்த செலவில் சீரமைத்த நகர் மன்ற உறுப்பினர்
தானே தன் சொந்த செலவில் சீரமைதாதுள்ளாரா.;
மயிலாடுதுறை நகராட்சி 36-வது வார்டு புளியந்தெருவில் தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கட்டடத்தின் சிமெண்ட் மேற்கூரை பல இடங்களில் உடைந்து காணப்படுவதால், மழை பெய்தால் ஒழுகுவதுடன், எப்போது வேண்டுமானாலும் விழும் அபாய நிலையில் உள்ளது. . இந்த மையத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான தடுப்பூசியும் செலுத்தப்படுவதால் கட்டடத்தை சீரமைக்கக் கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து, இந்த வார்டின் நகர்மன்ற உறுப்பினர் ஆனந்திஆனந்தகுமார் நகராட்சிக் கூட்டத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும், நடவடிக்கை இல்லை என கூறும் நகர்மன்ற உறுப்பினர் ஆனந்தி ஆனந்தகுமார் இந்த கட்டடத்தின் மேற்கூரை அகற்றப்பட்டு, தானே தன் சொந்த செலவில் ரூ.50000 செலவில் புதிய பைபர் சிமெண்ட் ஷீட் புதிதாக பொருத்தப்பட்டு, மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வர்ணம் பூசப்பட்டது.