இந்தி திணிப்பை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்
இந்தி திணிப்பைக் கைவிடக்கோரி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு அமைப்பினர்ஆர்ப்பாட்டம்;
இந்தியை கட்டாய பாடமாக திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் வழக்கம்போல் அளிக்கும் கல்வி நிதி ரூ.2ஆயிரம்கோடியை அளிப்போம் என்று மறைமுகமாக இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசின் செயலைக் கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக திராவிடர் கழகத்தினர் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திராவிடர் கழக மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் கல்யாணம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்தியை திணிக்கும் பாஜக அரசைக் கண்டிக்கிறோம், இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்காதே பண்பாட்டு படையெடுப்பா, பண்பாட்டு படையெடுப்பா, தமிழகத்திற்கு சேரவேண்டிய கல்விநிதியை தரமறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டிக்கிறோம், மிரட்டாதே மிரட்டாதே ஒன்றிய அரசே மிட்டாதே என்று முழக்கங்களை எழுப்பினர். இதில் பகுத்தறிவு எழுத்தாளர்மன்றம் தளபதிராஜ், மாவட்ட துணைத்தலைவர் ஞானவள்ளுவன் ஆகியோர் கலந்துகொண்டனர்