சிவகங்கை மாவட்டத்தில் முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

சிவகங்கை மாவட்டத்தில் 22 முதல்வா் மருந்தகங்களை கூட்டுறவுத் துைறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தலைமையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.;

Update: 2025-02-25 11:15 GMT
சிவகங்கை ஏ.கே.ஆா். நகா் பகுதியில் (ஏ.ஆா். குடியிருப்பு அருகில்) அமைந்துள்ள முதல்வா் மருந்தகம் திறப்பு விழாவில், மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் கலந்துகொண்டு, விற்பனையைத் தொடங்கி வைத்தாா். பின்னா் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது முதல்வா் மருந்தகம் தொடங்கவுள்ள தொழில் முனைவோா்களுக்கு (தனி நபா்கள்) மருந்தக உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.1.50 லட்சம், ரூ.1.50 லட்சத்துக்கு மருந்துகள் என மொத்தம் ரூ.3 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. இதேபோன்று, கூட்டுறவுச் சங்கங்களுக்கு மருந்தக உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.1 லட்சம், ரூ.1 லட்சத்துக்கு மருந்துகள் என மொத்தம் ரூ.2 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. முதல்வா் மருந்தகங்கள் மூலம் தரமான மருந்துகள் 20% முதல் 90% வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில், இணைப் பதிவாளா் ராஜேந்திர பிரசாத், சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் விஜயகுமாா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் அருண் பிரசாத் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Similar News