வழக்கறிஞர் சட்ட திருத்த மசுதவித்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வழக்கறிஞர்

மத்திய அரசின் புதிய வழக்கறிஞர் சட்ட திருத்த வரைவு மசோதா 2025-ஐ திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம்.;

Update: 2025-02-26 13:44 GMT
R_TN_MYD_26.02.2025_Advocates Court boycott and protest_visual_ Krishna மத்திய அரசின் புதிய வழக்கறிஞர் சட்ட திருத்த வரைவு மசோதா 2025 திரும்ப பெற வலியுறுத்தி மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் சங்கம் இணைந்து நடத்திய இந்த பணி புறக்கணிப்பு போராட்டம் காரணமாக 400-க்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு செல்லாததால் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் புதிய வழக்கறிஞர் சட்ட திருத்த வரைவு மசோதா 2025 மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும், மத்திய மாநில அரசுகள் உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வேண்டும், வழக்கறிஞர் ஹேம நலநிதியினை ரூ25 லட்சமாக உயர்த்த வேண்டும் வழக்கறிஞர் சேமநல வில்லை ரூ‌.30 லிருந்து ரூ.120 ஆக உயர்த்தப்பட்டதை மறுபரிசீலனை செய்து குறைந்த கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Similar News