குத்தாலத்தில் சார் பதிவாளர் அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் புதிதாக சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா. 1.92 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி மயிலாடுதுறை எம்எல்ஏ துவங்கி வைத்தார் :-;

Update: 2025-02-26 13:50 GMT
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் புதிதாக சார்பதிவாளர் அலுவலகம் கட்டடம் கட்டும் பணிக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் 1.92 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. 4912. 69 சதுர அடி பரப்பளவில் கோப்பு அறை, அலுவலக அறை, கணினி அறை, பணியாளர் ஓய்வு அறை, தடையில்லா மின்சார அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி கட்டிடம் கட்டுவதற்கான முதல் செங்கல்லை எடுத்து வைத்து பணிகளை துவங்கி வைத்தார். இதில் குத்தாலம் சார்பதிவாளர் கார்த்திகேயன், பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன், முன்னாள் எம்எல்ஏக்கள் கல்யாணம், அன்பழகன் பேரூராட்சி துணைத் தலைவர் சம்சுதீன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Similar News