கன மழை எச்சரிக்கை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் 18,000 மெட்ரிக்டன் நெல் மூட்டைகளை உடனடியாக பாதுகாப்பாக அகற்ற மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்:-;
மயிலாடுதுறை மாவட்டத்தில் 1,70,000 ஏக்கரில் நிகழாண்டு சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இதில் 95 சதவீதம் அறுவடை பணிகள் முடிவடைந்து விட்டன. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 170 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 38,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாமல் கொள்முதல் நிலையங்களிலேயே தேக்கம் அடைந்துள்ளது. . நாளை மறுநாள் கன மழை எச்சரிக்கை காரணமாக, திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து அடுக்கி வைக்கப்பட்டுள்ள 18,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இயக்கம் செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள், லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். உடனடியாக இயக்கம் செய்யவும் அரவைக்கு ரயில் மூலம் ஏற்றி அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டார். மேலும் தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகளை மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படாமல் பூட்டி கிடக்கும் தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்திலும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலையிலும்; பாதுகாப்பாக வைக்கவும் அவர் அறிவுறுத்தினார்.