வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு

50- க்கும் மேற்பட்ட மாணவிகள் காலில் சலங்கை அணியும் நிகழ்ச்சி;

Update: 2025-03-01 11:16 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில், மாசி மக திருவிழாவை முன்னிட்டு, 50- க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு, காலில் சலங்கை அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், நாட்டிய பயிற்சியாளர் பிரியதர்ஷனியிட ம் நாட்டியம் கற்று கொண்ட மாணவிகளுக்கு சலங்கை அணிவிக்கப்பட்டு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் அளிக்கப்பட்டது. நாட்டியம் கற்று கொடுத்த குருவிடம் ஆசிப் பெற்று, புஷ்பாஞ்சலி, சிவன் நடனம் உள்ளிட்ட பல்வேறு நடனங்களை, கொட்டும் மழையிலும் தொடர்ந்து ஆடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். மாணவிகளின் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததால், பயிற்சியாளர் பிரியதர்ஷினிக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

Similar News