திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா
திருமருகல் - திட்டச்சேரியில் திமுக கொடியேற்றும் விழா;
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய திமுக கட்சி அலுவலகத்தில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வ.செங்குட்டுவன் தலைமை வகித்து, கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். விழாவில், பொதுக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட பிரதிநிதிகள் ஜெயக்குமார், ஜெயபால், குமரவேல், மாவட்ட அயலக அணி துணை தலைவர் விஜயகணபதி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன், ஒன்றிய பொருளாளர் தமிமுன் அன்சாரி, ஒன்றிய துணை செயலாளர்கள் மதியழகன், நெடுமாறன் மற்றும் ஒன்றிய, கிளை, இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதேபோல், திட்டச்சேரியில் நகர செயலாளர் முகமது சுல்தான் தலைமையில், அவைத் தலைவர் ராமலிங்கம் கட்சியின் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட பிரதிநிதிகள் குணசேகரன், ஹமீது ஜெகபர் மற்றும் நகர, கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.