ஸ்ரீவில்லிபுத்தூரில் தருமபுரம் ஆதீனத்தின் குருமுதல்வர் வாழ்ந்த இல்லம் தானம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தருமபுரம் ஆதீனத்தின் குருமுதல்வரான ஸ்ரீகுருஞானசம்பந்தர் அவதரித்த இடத்தை வாங்கி தருமபுரம் ஆதீனகர்த்தரிடம் தானமாக வழங்கிய தொழிலதிபர்:- அந்த இடத்தில் கருங்கல் திருப்பணியில் இந்த ஆண்டிலேயே கோயில் எழுப்பப்படவுள்ளதாக தருமபுரம் ஆதீனகர்த்தர் தெரிவித்தார்;

Update: 2025-03-05 17:10 GMT
மயிலாடுதுறையில் 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்திருமடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தை தோற்றுவித்த குருமுதல்வர் ஸ்ரீகுருஞானசம்பந்தர் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தவர். குருஞானசம்பந்தர் பிறந்த இடத்தில் அவருக்கு கோயில் எழுப்ப வேண்டும் என்ற தருமபுரம் ஆதீனத்தின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த பொறியாளர் மார்கோனி என்பவர் அந்த இடத்தை வாங்கி, அதனை தருமபுரம் ஆதீனத்திற்கு தானமாக வழங்கும் நிகழ்ச்சி இன்று ஆதீன மடத்தில் நடைபெற்றது. அப்போது, அந்த இடத்துக்கான ஆவணங்களை தருமபுரம் ஆதீனத்திடம் மார்கோனி தானமாக வழங்கினார். இதனைப் பெற்றுக் கொண்ட 27-வது குருமகா சன்னிதானம், ஸ்ரீவில்லிபுத்தூரில் குரு முதல்வரின் பூர்வீக இல்லத்தை இந்த ஆண்டிலேயே புதுப்பித்து, அதன் பின்புறம் கருங்கல் திருப்பணி செய்து, பஞ்சலோகத்தால் குரு முதல்வரின் சிலையை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டப் போவதாகவும், மேலும் அங்கு வேதபாடசாலை மற்றும் பள்ளிக்கூடம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Similar News