கேங்மேன் பணியாளர்களுக்கு கள உதவியாளர் பணி வேண்டும்
மயிலாடுதுறையில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு கேங்மேன் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்:-;
. கேங்மேன் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் மின்வாரிய சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மயிலாடுதுறை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மாவட்ட துணை செயலாளர் சிவராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மின்வாரியத்தில் பணியாற்றும் கேங்மேன் பணியாளர்களுக்கு 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதிமுதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு இருந்து 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், அவர்களுக்கு சீருடை வழங்க வேண்டும், வெளிமாவட்டங்களில் பணிபுரியும் கேங்மேன் பணியாளர்களுக்கு அவர்களது சொந்த ஊர்களுக்கு விருப்ப ஊர் மாறுதல் உத்தரவு வழங்க வேண்டும், சொந்த ஊர் மாறுதல் உத்தரவு பெற்றுள்ளவர்களை பணி விடுவிப்பு செய்து அந்த ஊர்களில் பணியில் சேர அனுமதிக்க வேண்டும், கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக பதவி மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.