பஞ்சமி நிலத்தை ஆட்டையை போட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி புகார் மனு
பஞ்சமி நிலத்தை ஏமாற்றி பதிவுசெய்தவர்கள்மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்கீழ்நடவடிக்கை கோரி எஸ்.ப்பியிடம் புகார் மனு;
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சோதியக்குடி பகுதியில் விஜயகுமார் என்பவரது தந்தை தங்கையன் பெயரில் பஞ்சமி நிலம் 4050 சதுரமீட்டர் உள்ளது. பத்திரம் மற்றும் பட்டா விஜயகுமாரிடம் உள்ளது. இந்த நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்து பக்கத்து நிலத்தை சேர்ந்வரும் மாற்று சமூகத்தை சேர்ந்தவருமான மருதமுத்து என்பவர் கொள்ளிடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவுசெய்து வேறு நபருக்கும் விற்றுள்ளார். இதுகுறித்து சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவை ரத்து செய்யகோரியும், சார்பதிவாளர் மற்றும் மருதமுத்து ஆகியோர்மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்ககோரி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவக்கை எடுக்காததால் மயிலாடுதுறை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழக்கறிஞர் அருள் தலைமையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.