மும்மொழிக் கொள்கையை கண்டித்து இளைஞர் பெருமன்றத்தினர் முற்றுகை

மொழித் திணிப்பைக் கண்டித்து மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்;

Update: 2025-03-06 12:50 GMT
மொழித் திணிப்பைக் கண்டித்து மயிலாடுதுறையில் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக மக்கள் மீதான ஹிந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பை எதிர்த்தும், தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழி திட்டத்தை ஏற்றுக் கொண்டால்தான் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்துக்கான நிதியை வழங்குவோம், இல்லை என்றால் வழங்க முடியாது என ஆணவமாக பேசி வரும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து இந்த முற்றுகைப் போராட்டம்; நடைபெற்றது. மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு மாவட்ட செயலாளர் ஜென்சன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி பின்னர் கலைந்து சென்றனர்.

Similar News