துணி துவைக்கும்போது கோயில் குளத்தில் மூழ்கி பெண்பலி

மயிலாடுதுறை    மயூரநாதர் ஆலயத்தின் கீழ் கோபுரம் முன்பாக உள்ள அய்யன் குளத்தில் செல்லம்மாள்(55) என்பவர் துணிதுவைக்கும்போது தண்ணீரில் மூழ்கி பலியானார்;

Update: 2025-03-06 13:58 GMT
மயிலாடுதுறை மயூரநாதர் ஆலய அய்யன்குளத்தில் மயிலாடுதுறை இந்திரா காலணியை சேர்ந்த சின்னக்கண்ணு மனைவி செல்லம்மாள்(55) என்பவர் சம்பவ தினத்தன்று காலை  11 மணி அளவில் குளத்துப் படித்துறையில் துணிதுவைத்து அலசுவதற்கு படியிலிருந்து இறங்கியவர் தண்ணீரில் மூழ்கிவிட்டார், உடனடியாக மயிலாடுதுறை தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர், தீயணைப்புத்துறையினர் விரைந்துசென்று குளத்தில் தேடியபோது செல்லம்மாள் இறந்தநிலையில் அவரது உடலை மீட்டனர்.  இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News