செல்போன் வழிபறி நபர் கைது

சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் இரவு நேரத்தில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் தொடர் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நபர் கைது ஆணைக்காரன்சத்திரம் போலீசார் நடவடிக்கை.;

Update: 2025-03-09 13:49 GMT
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆணைக்காரன்சத்திரம் காவல் சரக்கத்திற்கும் உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக மாங்கனம்பட்டு ரயில்வே கேட், மயில கொல்லை, காந்தி சிலை, சோதியக்குடி பைபாஸ் ஆனந்த கூத்தன் பைபாஸ் சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்களிடம் செல்போன் பறிப்பு சம்பவம் நடைபெற்று வந்தது. இது குறித்து வந்த புகாரின் பெயரில் ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காவலர்கள் சாமிநாதன் விஜயகுமார் ஆகியோர் கடந்த சில நாட்களாக 50க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி தொடர்ந்து ஆய்வு செய்து வந்தனர். இதில் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட தாண்டவன் குளம் நவநீதக்கண்ணபுரம் பகுதியை சேர்ந்த அருள் குமரன் ( 25 ) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த விலையுயர்ந்த 4 செல்போன்களை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.போலீஸ் சாரின் துரித நடவடிக்கக்கு பொதுமக்கள் பெண்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Similar News