புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா
ரூபாய் 23.77 இலட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை மற்றும் சமையலறை கூடம் திறப்பு விழா பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம் முருகன் பங்கேற்று திறந்து வைத்தார்.;
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கோடி மங்கலம் ஊராட்சியில் ரூபாய் 17.50 லட்சம் மதிப்பீட்டில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் கலந்து கொண்டு பொதுமக்களில் பயன்பாட்டிற்காக புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். இதே போல் கோடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூபாய் 6.27 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட காலை உணவு திட்ட சமையல் கூடத்தினையும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் குத்தாலட் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஆர்.ராஜா , வட்டரா வளர்ச்சி அலுவலர் சோபனா மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.