நாகை ரயில் நிலையத்தில் பயணிகளிடம் வழிப்பறி

அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது;

Update: 2025-03-13 12:16 GMT
நாகை ரெயில் நிலையத்தில் பயணிகளிடம், செல்போன், பர்ஸ், நகை உள்ளிட்டவற்றை வழிப்பறி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தது. இது குறித்து, பொதுமக்கள் நாகை ரயில்வே போலீஸ் நிலையத்தில் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். அதன்பேரில், ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, வழிப்பறி நபரை தேடி வந்தனர். இந்நிலையில், ரயில்வே போலீசார் நேற்று அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த அருண் பாண்டியன் (36) என்பவரை கைது செய்து, நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர். அருண் பாண்டியனை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, திருச்சி ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு ராஜன், நாகை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவின்பேரில், ரயில்வே போலீசார் அருண் பாண்டியனை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News