தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் மறியல்

மறியல்;

Update: 2025-03-14 02:34 GMT
உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், அனைத்து நோய்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.நேற்று மதியம் 3 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 114 பேரை உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் கைது செய்து திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

Similar News