தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம்
குமாரபாளையம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கப்பட்டது.;
குமாரபாளையம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கப்பட்டது. தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றில் விரிவாக்கம் செய்யும் விதமாக நேற்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதன்படி குமாரபாளையம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் காலை உணவு வழங்கும் திட்டத்தை குமாரபாளையம் நகராட்சி தலைவர், வடக்கு நகர தி.மு.க. பொறுப்பாளர் விஜய்கண்ணன் துவக்கி வைத்தார். இதில் விஜய்கண்ணன் பேசியதாவது: இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் வரவுள்ளது. தோமை பணியாளர்கள் அனைத்து பகுதியில் குப்பைகளை தூய்மை படுத்தி, ஆட்சிக்கு நல்ல பெயர் பெற்றுத்தர வேண்டும். உணவு வழங்கும் திட்டம் ஒப்பந்ததாரர் மூலம் தான் செயல்படுத்தப்படுறது. உணவு சரியில்லை என்னிடம் சொல்லுங்கள். உரிய நடவடிக்கை எடுத்து தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கிறேன். அதை விடுத்து உணவினை கீழே கொட்ட வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார். இதில் ஆணையாளர் ரமேஷ், துணைத் தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் ஜேம்ஸ், கனகலட்சுமி கதிரேசன், சுமதி சந்திரன், விஜயா, அம்பிகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.