ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் பன்மொழி புலமை கொண்ட அமெரிக்கா வாழ்,கவிஞர் மொழி பெயர்ப்பாளர் கலந்துகொண்டு மாணவர்களிடையே சிறப்புரை...

ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் பன்மொழி புலமை கொண்ட அமெரிக்கா வாழ்,கவிஞர் மொழி பெயர்ப்பாளர் கலந்துகொண்டு மாணவர்களிடையே சிறப்புரை...;

Update: 2026-02-09 15:06 GMT
ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் பன்மொழி புலமை கொண்ட அமெரிக்கா வாழ்,கவிஞர் மொழி பெயர்ப்பாளர் கலந்துகொண்டு மாணவர்களிடையே சிறப்புரை... அமெரிக்காவில் திருக்குறளை நான் சொல்லிக் கொடுக்க வேண்டும்,பல நூல்கள் இருந்தாலும் திருக்குறளை மொழி பெயர்ப்பு செய்வதாக கவிஞர் தாமஸ் ஹிட்டொஷி புரூஸ்மா பேட்டி... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்துறை சார்பில் தமிழ் மன்ற விழாவானது கல்லூரி முதல்வர் பொறுப்பு முனைவர் இரா.சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக பன்மொழி புலமை கொண்ட அமெரிக்கா வாழ் கவிஞர், மொழிபெயர்ப்பாளர்,(மாமலை மருந்து) தாமஸ் ஹிட்டொஷி புரூஸ்மா கலந்துகொண்டு தமிழ் திருக்குறளை பற்றி கல்லூரி மாணவ மாணவிகளிடையே பேசினார். கல்லூரி மாணவ மாணவிகள் திருக்குறளை பற்றி கேட்கும் குறளின் விளக்கம்,பொருள் உள்ளிட்ட விளக்கங்களை எடுத்து கூறினர். தொடர்ந்து பேசுகையில் சிறுவயதில் எனக்கு கவிஞன் ஆக வேண்டும் என ஆசை இருந்ததாகவும், அதனை நிறைவேற்ற தான் செயல்படுவதாகவும் பேசினார். மாணவி ஒருவர் இந்தியாவில் பிடித்த உணவு என்ன என கேட்டபோது எனக்கு பிடித்தது தோசை மற்றும் சட்னி ரொம்ப பிடிக்கும், பழைய சோறு சாப்பிடுவதாகவும் கூறினார். செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தாமஸ் ஹிட்டொஷி புரூஸ்மா.., கடந்த 28 வருடமாக தமிழ் படித்து வருகிறேன்,5 வருடமாக தமிழ்நாட்டில் தங்கி படித்து வருகிறேன். தமிழ் படிக்க படிக்க ஆர்வம் வந்தது எனது வாத்தியார் இலக்கியம் கற்றுத் தந்தது மேலும் தமிழ் மீது எனக்கு ஆர்வம் அதிகரித்தது. அவ்வையார்,கவிதை, செய்யுள் போன்ற தமிழ் இலக்கியங்களை கற்றுக்கொண்டு அமெரிக்காவுக்கு சென்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததாகவும் தற்போது அதிலேயே கவிஞராக இருப்பதாக கூறினார். சிங்கப்பூர்,மலேசியா உள்ளிட்ட நாடுகளின் தமிழைப் பற்றி பேசி உள்ளேன், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா,இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தன்னை அழைத்து உள்ளதாகவும் எங்கு சென்றாலும் திருக்குறளை பற்றி தான் நான் பேசுவேன்., ஏனென்றால் எனது கடமை. அமெரிக்காவில் பல நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்வதாக அமெரிக்கா கவிஞர் தாமஸ் ஹிட்டொஷி புரூஸ்மா கூறினார்.. நிகழ்ச்சியில் முனைவர் யூசுப்கான், தமிழ்த்துறையின் தலைவர் இணைப் பேராசிரியர் முனைவர் இரா.கலைச் செல்வி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். முனைவர் சி. நாகூர்செல்வம் வரலாற்றுத் துறைத்தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் இணைப்பேராசிரியர் முனைவர் இரா.கலைச் செல்வி, இணைப் பேராசிரியர் முனைவர் மு. நடராஜன், இணைப் பேராசிரியர் முனைவர் க.செல்வராஜ், இணைப் பேராசிரியர் முனைவர் ந. தனசேகர், இணைப் பேராசிரியர் முனைவர் க.அன்பழகன், இணைப்பேராசிரியர் முனைவர் அண. செல்வ கணபதி. இணைப்பேராசிரியர் முனைவர் து. ரேணுகா தேவி, முனைவர் இரா.பிரபாகர் உதவிப்பேராசிரியர், மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் முனைவர் இரா.ரம்யா, திவ்யா மகேஸ்வரி மற்றும் இணைப் பேராசிரியர் முனைவர் ந.தனசேகர் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

Similar News