சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக அரசு நில ஆக்கிரமிப்பு: ராசாம்பாளையம் மக்கள் ஆட்சியரிடம் மனு
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து அந்த இடத்தை ஆய்வு செய்து அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்புகளை அகற்றி தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
நாமக்கல் அருகே உள்ள ராசாம்பாளையம்–எல்லப்பாளையம் கிராமத்தில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறாக, அரசு புறம்போக்கு நிலத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.பிள்ளையார் கோவில் அருகேயுள்ள குறுகிய சாலை வளைவு காரணமாக பள்ளி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருவதால், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.