நாமக்கல்லில் அரசு மகளிர் கல்லூரியில் மத்திய பட்ஜெட் குறித்து சிறப்பு கருத்தரங்கம்!

மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் மற்றும் அதன் சமூக பொருளாதார முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.;

Update: 2026-02-09 14:53 GMT
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி, பொருளியல் துறை சார்பில், மத்திய பட்ஜெட் 2026–2027 குறித்து மாணவிகளுக்கான சிறப்பு கருத்தரங்கம் மற்றும் விவாத மேடை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் மாதவி தலைமையுரை வழங்கி, மத்திய பட்ஜெட் மாணவிகளின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து எடுத்துரைத்தார்.பொருளியல் துறை தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் முனைவர் புவனேஸ்வரி வரவேற்புரை மற்றும் சிறப்புரை வழங்கி, மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் மற்றும் அதன் சமூக பொருளாதார முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.தொடர்ந்து, பொருளியல் துறை இணைப் பேராசிரியர் பிரபா,மத்திய பட்ஜெட்டின் மையக் கருப்பொருள் குறித்து முன்னுரை வழங்கினார். மேலும், ஏனைய பேராசிரியர்கள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள உள்கட்டமைப்பு வளர்ச்சி, பாதுகாப்புத் துறை, பெண்கள் முன்னேற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பான அம்சங்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கி சிறப்புரை ஆற்றினர்.இந்த கருத்தரங்கில் மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து கேள்விகள் எழுப்பி விளக்கங்களை பெற்றனர்.

Similar News