அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரப்பு செய்துள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு .

நாமக்கல் மாவட்டம் ராசாம்பாளையம் கிராமம் எல்லப்பாளையம் கிராமத்தில் தற்போது சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள ஊர் பிள்ளையார் கோவிலுக்கு மேற்கு பகுதியில் உள்ள சாலை வளைவு மிகவும் குறுகலாகவும் உள்ளது இதன் காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி பள்ளி வாகனங்கள் கார்கள் மற்றும் இருசக்க வாகனங்கள் விபத்துக்கள் அதிகமாக ஏற்படுகிறது.;

Update: 2026-02-09 13:22 GMT

பள்ளி பேருந்துகளை தினந்தோறும் குழந்தைகளை ஏற்றி சென்று இந்த வழியாக அதிகமாக செல்லும் காரணத்தினால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களின் உயிர் பாதுகாப்பு பெரும் ஆபத்தில் உள்ளது மேற்கண்ட அளவிற்கு தெற்கு பகுதியில் உள்ள நிலம் முழுவதும் அரசு புறம்போக்கு நிலம் ஆகும் ஆனால் அந்த அரசு புறம்போக்கு நிலத்தில் சில நபர்கள் சட்ட விரோதமாக ஆக்கிரம்பு செய்து வருகின்றனர் இதனால் சாலை விரிவாக்கு பணிகள் முறையாக நடைபெற முடியாமல் கடுமையான எடியூறு ஏற்பட்டு வருகிறது இது குறித்து சுமார் 20 நாட்களுக்கு முன்பு கிராம பொதுமக்கள் சார்பில் ஆக்கிரமிப்பு செய்த நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது ஆக்கிரமிப்பு அகற்ற முடியாது என கூறிவிட்டனர் இதனால் சாலை விரிவாக்க பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.எனவே பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் வந்து அந்த இடத்தை ஆய்வு செய்து அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்புகளை அகற்றி தருமாறு அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்

Similar News