சத்தியில் கோர்ட் பணத்தை கையாடல் செய்த தலைமை எழுத்தாளர் கைது

சத்தியில் கோர்ட் பணத்தை கையாடல் செய்த தலைமை எழுத்தாளர் கைது;

Update: 2025-03-15 03:53 GMT
சத்தியில் கோர்ட் பணத்தை கையாடல் செய்த தலைமை எழுத்தாளர் கைது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பழைய பஸ் நிலையம் அருகே ஒருங்கிணைந்த கோர்ட் செயல்பட்டு வருகிறது. ஜே.எம். கோர்ட் நீதித்துறை நடுவர் உமா தேவி சத்தி போலீசில் கோர்ட்டில் பணியாற்றி வரும் தலைமை எழுத்தாளர் ஞானபிரகாஷ் என்பவர் கோர்டில் பல்வேறு வழக்கில் வசூலிக்கப்பட்ட தொகை, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தால் முடிக்கப்பட்ட வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசுடைமையாக்க உத்தரவிடப்பட்ட தொகைகள், நீதிமன்றத்தால் சத்தி காவல் நிலைய குற்ற அபராத தொகை உள்ளிட்ட வசூலான மொத்தம் 3 லட்சத்தி 39 ஆயிரத்து 170 ரூபாரை அரசு கணக்கில் செலுத்தாமல் வழக்கு சொத்துகளுக்கு உண்டான தொகைகளை நீதிமன்ற வேல்யுபல் பாக்ஸ்சில் வைக்காமலும், கணக்கில் செலுத்தாமல் மேற்படி தொகை முழுவதையும் தனது சுயலாபத்திற்காக கையாடல் செய்துள்ளதாக தனக்கு தெரியவந்துள்ளதாகவும் தலைமை எழுத்தாளர் ஞானப்பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார். புகாரின் பேரில் சக்தி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின் அவரை கோபி நீதிமன்றத்தில் ஆச்சாரப்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News