விஸ்வரூப பக்த ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழா.
ஆரணி அடுத்த இரும்பேடு, ஹரிஹரன் நகரில் அமைந்துள்ள விஸ்வரூப பக்த வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.;
ஆரணி அருகே இரும்பேடு ஆரணி -சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வரூப பக்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 7-ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மேலும் இந்த ஆலயத்தில் வருடந்தோறும் மார்கழி மாதம் அமாவாசை அனுமன் ஜெயந்தி அன்று ஸ்ரீ விஸ்வரூப பக்த ஆஞ்சநேயருக்கு , முறுக்கு, அதிரசம், வடை உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்து பொதுமக்கள் தங்களை வேண்டுதல் நிறைவேற்றும் வகையில் சுவாமிக்கு மாலைகள் சாத்தி வழிபாடு செய்வது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு ஸ்ரீ விஸ்வரூப பக்த ஆஞ்சநேயர் சிலைக்கு துளசி, சாமந்தி உள்ளிட்ட வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு 10ஆயிரத்து 8 வட மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், ஆரணி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், நகரச் செயலாளர் அசோக் குமார், நகர மன்ற உறுப்பினர்கள் மோகன், குமரன், தகவல் தொழில்நுட்ப மண்டல செயலாளர் சரவணன், ஒன்றிய நிர்வாகிகள் வேலு, மணிமாறன் மற்றும் கோயில் விழா குழுவினர், அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.