பெரம்பலூர் கலெக்டர் ஆபிஸ் முன் ஆர்ப்பாட்டம்
சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு 2025-26 பட்ஜெட்டில் குறைந்தபட்ச சிறப்பு பென்ஷன் ரூ.6750 வழங்க வேண்டி மாபெரும் போராட்டம் நடைபெற்றது.;

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு 2025-26 பட்ஜெட்டில் குறைந்தபட்ச சிறப்பு பென்ஷன் ரூ.6750 வழங்க வேண்டி மாபெரும் போராட்டம் நடைபெற்றது. அனைத்து ஓய்வூதிய சங்க மாவட்ட தலைவர் ஆளவந்தார் சிறப்புரையாற்றினார். நிறைவாக மாவட்ட பொருளாளர் வீ.முத்துசாமி நன்றி உரை கூறினார்.