வாணியம்பாடியில் திரையரங்கில் மோதல்

வாணியம்பாடியில் திரையரங்கில் திரையரங்கு உழியர் மோதல்;

Update: 2025-03-16 03:59 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் திரையரங்கத்தில் நணபர்களுடன் திரைப்படம் பார்க்கச்சென்ற இளைஞரை மதுபோதையில் இருந்ததாக கூறி இளைஞரை தாக்கி திரையரங்க ஊழியர்கள் இளைஞரை திரையரங்க ஊழியர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் திரையரங்கத்தில் நேற்று இரவு நாராயணபுரம் பகுதியை சேர்ந்த கஜேந்திரன் என்பவர் தனது நண்பர்கள் 5 பேருடன் திரைப்படம் பார்க்க சென்றுள்ளார், அப்பொழுது, திரையரங்கத்தில் டிக்கெட் எடுத்துக்கொண்டு கஜேந்திரன் உள்ளே சென்ற போது, திரையரங்க ஊழியர்கள் கஜேந்திரனின் நண்பர்கள் சிலர் மதுபோதையில் இருப்பதால், திரையரங்கத்தில் உள்ளே செல்ல அனுமதி மறுத்துள்ளனர், அப்பொழுது டிக்கெட் தொகையை கஜேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் திருப்பிகேட்டு, திரையரங்க ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர், அப்பொழுது, ஆத்திரமடைந்த திரையரங்க ஊழியர்கள் கஜேந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளனர், இதில் படுகாயமடைந்த கஜேந்திரன் சிகிச்சையிற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து, வாணியம்பாடி நகர காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.. மேலும் திரையரங்கில், திரைப்படம் பார்க்க நண்பர்களுடன் சென்ற இளைஞரை மதுபோதையில் இருந்ததாக கூறி திரையரங்க ஊழியர் இளைஞரை சரமாரியாக தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது..

Similar News