சர்க்கரை நோயாளிகளுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்
திண்டுக்கல் நாகல் நகரில் சர்க்கரை நோயாளிகளுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது;

திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் சர்க்கரை நோயாளிகளுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. திண்டுக்கல் சந்தை ரோடு அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கம் மற்றும் பகலவன் அறக்கட்டளை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை அழகர் நீரிழிவு சிகிச்சை மையம் இணைந்து சர்க்கரை நோயாளிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தினர். முகாமை மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துவக்கி வைத்தார். திண்டுக்கல் சந்தை ரோடு அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கம் மற்றும் பகலவன் அறக்கட்டளை தலைவர் நடராஜன் ,செயலாளர் வீரபாண்டியன் ,பொருளாளர் பிரபாகரன், துணை தலைவர் முஹம்மது ஹனீப் ,இணைச் செயலாளர் மனோகரன், துணைச்செயலாளர் பெரிய ராஜா, வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில் ஏராளமான முதியவர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளதா என கண்டுபிடிக்கப்பட்டு கண் சிகிச்சை முகாமும் நடத்தப்பட்டது. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு, கர்ப்பிணி பெண்களுக்கு, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், அதிக பசி தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், ஆறாத புண்கள், கால் மரத்து போதல் போன்ற அறிகுறி உள்ளவர்களுக்கும் முகாமில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும் சர்க்கரை நோயினால் விழித்திரை பாதிக்கப்படுபவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் லேசர் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.