சோளிங்கர்:புகையிலை பொருள் கடத்தியவர் கைது
சோளிங்கர்:புகையிலை பொருள் கடத்தியவர் கைது;

சோளிங்கர் அடுத்த கூடலூர் பகுதியில் கொண்டபாளையம் போலீசார், இன்ஸ்பெக்டர் மனோகர் தலைமையில் வாகன தணிகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். விசாரணையில் அவர் அன்வர்த்திகான்பேட்டை பகுதியை சேர்ந்த சுகுமார் (வயது 47) என்பதும், விற்பனைக்காக எடுத்து வந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 14 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார்சைக்களை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.