சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்!
சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்!;

சோளிங்கர் யோக நரசிம்ம சுவாமி கோவில் 1,305 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ளது. 46 படிகள் கொண்ட சிறிய மலையில் யோகா ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார். இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். அவர்கள் ரோப்கார் சேவையை பயன்படுத்தி பெரியமலையில் உள்ள யோக நரசிம்மர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக வருகிற 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ரோப் கார் இயங்காது எனவும், பக்தர்கள் படிக்கட்டுகள் வழியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம் எனவும், பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு வழக்கம்போல பக்தர்களுக்கு ரோப்கார் சேவை தொடரும் எனவும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.