கோவை: மாடு முட்டியதில் 3 பேர் காயம்-மாநகராட்சி நடவடிக்கை !

ரோடுகளில் சுற்றி தெரியும் மாடுகளை பிடித்துச் சென்ற மாநகராட்சி அதிகாரிகள்.;

Update: 2025-03-17 05:28 GMT
கோவை: மாடு முட்டியதில் 3 பேர் காயம்-மாநகராட்சி நடவடிக்கை !
  • whatsapp icon
கோவை புல்லுக்காடு பகுதியில் கோவை மாநகராட்சி 86-வது வார்டு புல்லுக்காடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் சுற்றித் திரிந்த மாடு ஒன்று, தொழுகை முடித்து வீடு திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை முட்டியது. இதில் பெண் ஒருவர், அவரது 5 மாத குழந்தை மற்றும் குடும்ப உறுப்பினர் ஒருவர் என மூவரும் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த மனிதநேய மக்கள் கட்சியின் 86-வது வார்டு கவுன்சிலர் அகமது கபீர், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று நலம் விசாரித்தார். மேலும், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் புல்லுக்காடு பகுதியில் சுற்றித் திரிந்த மாடுகளை நேற்று இரவு பிடித்துச் சென்றனர். மேலும், சாலைகளில் மாடுகளை திரியவிடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Similar News