தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பு மாநாடு

மாநாட்டில் கலந்து கொண்ட பொறியாளர்கள் போக்குவரத்து கழகத்தில்மிக மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் சுமார் 400 பேர்கலந்து கொண்டார்கள்.;

Update: 2025-03-16 18:14 GMT
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பு மாநாடு
  • whatsapp icon
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பு மாநாடு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் சீருடன் சிறப்போடும் நடைபெற்றது விழாவில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் கும்பகோணம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் திரு ஆர் .பொன்முடி விழுப்புரம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் , போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களின் சிறப்பு நேர்முக உதவியாளர் ஞானசம்பந்தம் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் திருச்சி மண்டலம் போக்குவரத்து கழக பொது மேலாளர் அவர்கள் போக்குவரத்து கழக அலுவலர் சங்க பொதுச் செயலாளர் செல்வகுமார் தலைவர் ரவி , பொருளாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மாநாட்டில்பொறியாளர் ராஜ்மோகன் (கும்பகோணம் கோட்டம்) வரவேற்புரை ஆற்றினார். பொறியாளர் சங்க செயலாளர் பாலாஜி (,மாநகர போக்குவரத்து கழகம்), சங்க தலைவர் குமரேசன் (சேலம் கோட்டம்) சங்க செயலாளர் கார்த்திகேயன் கோவை கோட்டம் ஆகியோர் பொறியாளர்களின் கோரிக்கையாக பொறியாளர்களுக்கு உரிய காலத்திற்கு பதவி உயர்வு தருதல் காலி பணியிடங்களை நிரப்புதல் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து பின்பு நிறுத்தி வைக்கப்பட்டபொறியாளர்களுக்குமாதம்தோறும் வழங்கப்பட்டு வந்த ஊக்க தொகையினை மீண்டும் வழங்குதல் போன்றவற்றை பொறியாளர்களின் கோரிக்கை மனுவாக மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் வழங்கினார்கள். மாநாட்டில் கலந்து கொண்ட பொறியாளர்கள் போக்குவரத்து கழகத்தில்மிக மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் சுமார் 400 பேர்கலந்து கொண்டார்கள். மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய போக்குவரத்து துறை அமைச்சர் போக்குவரத்து கழகத்தில் மக்களுக்காக அயராது உழைத்து நற்பணி ஆற்றும் பொறியாளர்களுக்கு அரசு விரைவில்கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும் என்று மகிழ்வுடன் தெரிவித்துக் கொண்டார்கள்.

Similar News