
இலவச ஆங்கில பயிற்சி குறித்த அறிவிப்பு தாட்கோ மூலம் பி.எஸ்சி, எம்.எஸ்சி நர்சிங்; போஸ்ட் பேசிக் பி.எஸ்சி நர்சிங் மற்றும் பொது செவிலியர் ஆகிய மருத்துவ படிப்புகளில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சியில் சேர தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.