மும்மொழி கொள்கையில் பாஜக கூட்டணியில் உள்ள பவன்கல்யாண் பதவியை தக்கவைத்து கொள்ள தன் விருப்பம்போல் பேசுகிறார்.அவருக்கு தமிழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை - விசிக தலைவரும் சிதம்
மும்மொழி கொள்கையில் ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் வைக்கும் கருத்து அவருக்கும் தமிழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை,;
மும்மொழி கொள்கையில் பாஜக கூட்டணியில் உள்ள பவன்கல்யாண் பதவியை தக்கவைத்து கொள்ள தன் விருப்பம்போல் பேசுகிறார்.அவருக்கு தமிழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை - விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பேட்டி. பெரம்பலூரில் பல்வேறு பகுதிகளில் விசிக நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். டாஸ்மார்க் ஊழல் தொடர்பான அமலாக்கத்துறை ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளதை குறிப்பிட்டு திமுக அரசை தவெக விஜய் ஆயிரம் கோடி வெறும் கையளவு நீர் எனவும், திமுக ஊழலில் காட்டாற்றையே உருவாக்கியுள்ளது என கடுமையான விமர்சனத்திற்கு டாஸ்மார்க் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை உள்நோக்கத்தோடு செயல்படும் பட்சத்தில் அதன்மீது வழக்கு தொடர உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளதை குறிப்பிட்டு பொறுத்திருந்து பார்ப்போம் என விஜயின் கருத்திற்கு பதில் அளித்தார். தொடர்ந்து,மும்மொழி கொள்கையில் ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் வைக்கும் கருத்து அவருக்கும் தமிழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, அவர் பாஜக கூட்டணியில் பதவியை தக்கவைக்க கூறிவருவதாக தாக்கி பேசிய அவர்,பவன்கல்யாணின் கருத்துக்களை தமிழகத்தில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என்று முற்று வைத்தார்.