விழுப்புரம் அருகே லிப்ட் கேட்டு பைக்கில் ஏறியவரை தாக்கிய நபர் கைது
லிப்ட் கேட்டு பைக்கில் ஏறியவரை தாக்கிய நபர் கைது;
விழுப்புரம் மாவட்டம், மங்களபுரத்தைச் சேர்ந்தவர் அன்புபிரியன் (26). இவர் நேற்று நாப்பாளயா தெரு பகுதியில் பைக்கில் வந்த மெக்கானிக் அஜித்குமாரிடம் லிப்ட் கேட்டு சென்றுள்ளார். பைக்கில் அமர்ந்ததில் இருந்தே திட்டியபடி வந்த அன்புப்பிரியனை, தன்னை திட்டுவதாக நினைத்து அஜித்குமார் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அன்புப்பிரியன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் அஜித்குமாரை நகர போலீசார் கைது செய்தனர்.