ரயில்வே பாலத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க கோரிக்கை
வேம்படிதாளம் அருகே உயர் மட்டும் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்;
சேலம் மாவட்டம், வேம்படிதாளம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்காத காரணத்தால் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பிள்ளை – காகாபாளையம் பிரதானசாலை வேம்படிதாளம், திருவளிப்பட்டி சந்தை அருகே உள்ள ரயில்வே கீழ்பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த பாலத்தில் இரண்டு வழிகள் உள்ளன. அதில் ஒரு பாதை வழியாக வாகனங்கள் செல்வதற்கும், மற்றோரு பாதையில் வாகனங்கள் எதிர் திசையிலிருந்து வருவதற்கும் ஏற்றவாறு அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேம்படிதாளம் பகுதிகளிலிருந்து வரும் சாக்கடை கழிவு நீரை பாலத்தின் ஒரு வழியில் செல்லுமாறு ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் தற்போது ஒரே வழியில் வாகனங்கள் செல்வதும், எதிர் திசையிலிருந்து வருவதுமாக உள்ளதால் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அவசர காலத்தில் ஆம்புலன்சில் செல்லும் நோயாளிகள்பாலத்தில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால்உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவே உயர் மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்