தேமுதிக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
பிரசித்தி பெற்ற செட்டிகுளம் முருகன் கோயிலில் வெள்ளித்தேர்;
பெரம்பலூர் அருகே தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட செட்டிகுளத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் ஆனந்தராஜ் தலைமையில், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் விஜயகுமார் முன்னிலையில் அக்கட்சியின் கொடி ஏற்றி பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு பேனா மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து செட்டிகுளத்தில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் முத்துவேல் சங்கர் பச்சமுத்து கார்த்திகேயன் சிவசெல்வன் கருணாநிதி ஆதிமூலம் பிரசாந்த் திருமாந்துறை கருணாநிதி விஜய கண்ணன் சத்தியமூர்த்தி காமராஜ் முருகேசன் கிருஷ்ணசாமி அறப்பளீஸ்வரன் சுரேஷ் கனகராஜ் முத்துச்சாமி மகளிர் அணி மீனா கார்த்திகா ராஜேந்திரன் செல்வகுமார் பாலகிருஷ்ணன் சரவணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.