சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் சோதனைச் சாவடியில், கோபி மதுவிலக்கு போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையில் செய்ததில், கர்நாடகாவைச் சேர்ந்த 2 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கோவை மாவட்டம் சாமிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த பால்ராஜ் (20) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.