பெரியகுளம் காவல் நிலைய போலீசார் நேற்று (மார்.22) குற்றத்தடுப்பு சம்பந்தமாக ரோந்து மேற்கொண்டனர். அப்பொழுது சுல்தான் இப்ராஹிம் (49) என்பவர் பொது இடத்தில் நின்று கொண்டு அருவருப்பூட்டும் வகையில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்துள்ளார். போலீசார் எச்சரித்தும் அவர் கேட்காத நிலையில் சுல்தான் இப்ராஹிம் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.