தென்கரை காவல் நிலைய போலீசார் நேற்று (மார்.23) குற்றத்தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது டி.கள்ளிப்பட்டி பகுதி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மன்சூர் அலிகான், சூர்யா,பாலமுருகன் ஆகியோரிடம் சோதனை செய்ததில் அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.