உத்தம பாளையத்தில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

கைது;

Update: 2025-03-25 13:02 GMT
உத்தமபாளையம் காவல் நிலைய போலீசார் நேற்று (மார்.24) குற்றத்தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது உத்தமபாளையம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த முகமது இத்ரீஸ் என்பவரை சோதனை செய்த பொழுது அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 300 கேரள லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் முகமது இத்ரீஸ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Similar News