ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (27). இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது . இதன் காரணமாக கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன் தினம் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் சுப்பிரமணி தாக்கியதில் மனைவிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனை அடைந்த அவர் நேற்று (மார்ச்.24) மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை.