
கம்பம் நகர பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தலைவி கோமதி மற்றும் துணை தலைவி விஜிகலா ஆகியோர் இன்று கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரக்கூடிய டாஸ்மாக் கடையில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக அவரது புகைப்படம் அடங்கிய போஸ்டரை ஒட்ட முயன்றனர். தகவல் அறிந்த கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி இருவரையும் கைது செய்தனர்.