
தென்கரை காவல் நிலைய போலீசார் நேற்று (மார்ச்.25) சருத்துப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த டிப்பர் லாரியை சோதனையிட்டதில் அதில் மூன்றரை டன் எம்.சான்ட் கிராவல் மண் அனுமதியின்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது. லாரியை கைப்பற்றிய போலீசார் டிரைவர் ஜெயக்கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.