பஸ்சில் இருந்து விழுந்தவரின் கால்கள் நசுங்கியது

பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த தொழிலாளியின் கால்கள் நசுங்கியது;

Update: 2025-04-01 11:18 GMT
திருச்சி வேங்கூர் அசோக் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 40). தொழிலாளி. இவர் காந்திமார்க்கெட் அருகே உள்ள கோரிமேடு ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் தனியார் பஸ்சின் முன் பக்கம் ஏறினார். அப்போது எதிர்பாராத விதமாக படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதை கவனிக்காமல் டிரைவர் பஸ்சை இயக்கி யதாக தெரிகிறது. இதில் கீழே விழுந்த விஜயனின் 2 கால்களும் முன் சக்கரத்தில் சிக்கி நசுங்கி பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்ட அங் கிருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இது தொடர்பாக துவாக்குடி புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் தங்கமணி (24) என்பவர் மீது திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News