திருப்பத்தூர் அருகே குழந்தை இல்லாத விரக்தியில் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை*
திருப்பத்தூர் அருகே குழந்தை இல்லாத விரக்தியில் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை*;

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே குழந்தை இல்லாத விரக்தியில் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குனிச்சி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் (50) இவருக்கு மலர்கொடி (45) என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி இதுவரை குழந்தை இல்லாமல் விரக்தியில் இருந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக செல்வி (43) என்ற பெண்ணையும் முருகன் திருமணம் செய்து ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மலர்க்கொடி மற்றும் செல்வி ஆகிய இருவருக்குமே இதுவரை குழந்தை இல்லாததால் மிகவும் மன விரக்தியில் இருந்து வந்துள்ளனர் இதன் காரணமாக மனமுடைந்த மலர்கொடி வீட்டின் அருகே உள்ள சம்சுதீன் என்ற நபருக்கு சொந்தமான பாலடைந்த கிணற்றில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் முருகன் தனது முதல் மனைவியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் அமைதியாக இருந்துள்ளனர். இந்த நிலையில் கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் மேலும் அடையாளம் தெரியாத சடலம் இருப்பதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கந்திலி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் விரைந்து வந்த போலீசார் இது குறித்து திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் பின்னர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உடலை மீட்டனர். அழுகிய நிலையில் இருந்த உடலை பார்த்து கணவர் முருகன் கத்தி கதறி அழுதார். குழந்தை இல்லாத காரணத்தால் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்