பெயர் பலகைகள் தமிழில் வைக்க ஆட்சியர் அறிவிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் வைக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு;

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதிஸ் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் சார்பில் வணிக நிறுவனங்கள், கடைகளில் பெயர் பலகைகளை தமிழில் அமைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பெயர் பலகைகளை தமிழில் அமைப்பது குறித்து சம்பந்தப் பட்ட அரசுத்துறை அலுவலர்கள் நடவடிக்கைஎடுக்கவேண் டும். உள்ளாட்சி அமைப்புகள், வணிக நிறுவனங்களுக்கு வியாபார உரிமம் வழங்கும் போது தமிழில் பெயர் பலகைகள் இடம்பெற வேண்டும் என்பதை நிபந்தனையாக இடம்பெற செய்து அதனை செயல்படுத்த வேண்டும். மாவட்டத்தில் அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவ னங்களில் பெயர் பலகைகளை தமிழில் அமைப்பது குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தி தமிழில் பெயர் பலகைகள் இருப்பதை முறைப்படுத்த வேண்டும். தமிழில் பெயர் பலகைகள் வைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூறி செயல்ப டுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இதேபோல் மாவட்டத் திலுள்ள அரசு அலுவலகங்களில் தமிழ்நாடு ஆட்சிமொழி சட்டம் 1956-ன் செயலாக்கம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி சம்பந்தப்பட்டதுறை அலுவலர்கள் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.