வேலாயுதம்பாளையம்- 16 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த முதியவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை.
வேலாயுதம்பாளையம்- 16 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த முதியவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை.;
வேலாயுதம்பாளையம்- 16 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த முதியவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை. கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு 2021 ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் தேதி பாலியல் துன்புறுத்தல் செய்த, வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த அப்துல் சமது வயது 63 என்பவர் மீது, சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, பிறகு விசாரணைக்காக கரூர் ஊரக (க.பரமத்தி) அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, குற்றவாளியை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் இழைத்த அப்துல் சமத்திற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க நீதிபதி தங்கவேல் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து போலீசார் குற்றவாளி அப்துல் சமத்-ஐ பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.