திருப்பத்தூரில் பத்திரிக்கையாளரை தாக்கிய நபர்களை உடனடியாக கைது செய்ய கோரி கண்டன ஆர்பாட்டம்.

திருப்பத்தூரில் பத்திரிக்கையாளரை தாக்கிய நபர்களை உடனடியாக கைது செய்ய கோரி கண்டன ஆர்பாட்டம்.;

Update: 2025-04-02 06:17 GMT
திருப்பத்தூரில் பத்திரிக்கையாளரை தாக்கிய நபர்களை உடனடியாக கைது செய்ய கோரி கண்டன ஆர்பாட்டம்.
  • whatsapp icon
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் பத்திரிக்கையாளரை தாக்கிய நபர்களை உடனடியாக கைது செய்ய கோரி கண்டன ஆர்பாட்டம். திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எருது விடும் திருவிழா நடைப்பெற்றது. இந்த எருது விடும் திருவிழாவை கான வந்த நபரை மாடு முட்டியதில் பலத்த படுகாயம் அடைந்தார். அப்போது அக்கம் பக்கத்தினர் அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அப்போது அதனை படம் பிடிக்க சென்ற தனியார் தொலைக்காட்சியில் பத்திரிகையாளராக பணிப்புரியும் ப்ரவின் என்பவரை பெருமாப்பட்டு பகுதியை சேர்ந்த பாரதி என்பவரின் மகன் மதன் உள்ளிட்ட சில நபர்கள் செய்தியாளரை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த செய்தியாளர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் குரிசிலாப்பட்டு காவல் நிலைய போலீசார் மதன் மற்றும் செய்தியாளர் ப்ரவின் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதனை அறிந்த பத்திரிகையாளர்கள் காவல் துறையினர் செய்தியாளரை தாக்கிய மதன் உள்ளிட்ட சில நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும்,குற்றவாளிக்களுக்கு துணை போகும் குரிசிலாப்பட்டு காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

Similar News