திருப்பத்தூரில் லேசான சாரல் மழை
திருப்பத்தூரில் லேசான சாரல் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெப்பம் சுற்றெறித்த நிலையில் திடீரென வெப்ப சலனம் காரணமாக திடீரென மேகமூட்டத்துடன் லேசான மழை தூறல் விழுந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வாணியம்பாடி ஆம்பூர் கந்திலி நாற்றம்பள்ளி என சுற்றுவட்டார பகுதியில் முழுவதும் கடந்த சில தினங்களாகவே சுமார் 100 டிகிரி சரண் ஹிட் அளவிற்கு அதிகமாக வெப்பம் சுற்றெரித்து வந்த நிலையில்... இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் ஒரு சில நாட்களுக்கு வெப்ப சலனத்தின் காரணமாகவும் பருவ மாற்றத்தின் காரணமாகவும் திடீரென மழை பெய்யக்கூடும் என அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று திடீரென திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதி முழுவதும் மேக மூட்டத்துடன் தூறல் மற்றும் லேசான மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் வியாபாரிகள் பொதுமக்கள் என அனைவரும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்