உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு ஆட்டிசம் குறைபாடுள்ள நபர்களின் விழிப்புணர்வு பேரணி
உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு ஆட்டிசம் குறைபாடுள்ள நபர்களின் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்;
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் .மு. பிரதாப் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு ஆட்டிசம் குறைபாடுள்ள நபர்களின் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார் உலக ஆட்டிசம் தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 2 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இத்தினத்தில் ஆட்டிசம் குறைபாடு உள்ள நபர்களை ஏற்றுக் கொள்வது மற்றும் ஆதரவு அளிப்பது இந்நிகழ்வின் நோக்கமாகும் ஆகையால் தான் ஊக்குவிக்கும் வகையில் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சித் தலைவர் .மு. பிரதாப். தெரிவித்தார் முன்னதாக ஆட்டிசம் குறைபாடுள்ள மாணவர்களின் இசைக் கச்சேரியினை பார்வையிட்டு ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுடன் கேக்குகள் வெட்டி அவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஊட்டினார். இந்நிகழ்வில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், முட நீக்கியல் பயிற்றுநர் பிரீத்தா மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர். இந்நிகழ்வின் ஏற்பாடுகளை ஹோப் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்டின் நிறுவனர்/நிர்வாக அறங்காவலர் டாக்டர் வி. நாகராணி செய்தார்கள்.